மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பதவியேற்று முதன்முறையாக கலைஞர் இல்லத்தில் மு.க.ஸ்டாலின் எழுதிய குறிப்பு.! உதயநிதி வெளியிட்ட புகைப்படம்.!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கொரோனாவை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றுள்ளார். திருக்குவளையில் உள்ள கலைஞர் இல்லத்தில் உள்ள பார்வையாளர் பதிவேட்டில், "தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு" என்று கலைஞர் வழியில் குறிப்பெழுதினார்.
கழக தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக முத்தமிழறிஞரின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றபோது, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று கலைஞர் வழியில் குறிப்பெழுதினார். கலைஞர்-கழக தலைவர் வழியில் நாமும் கடமையாற்றுவோம் pic.twitter.com/soxgmRSyTr
— Udhay (@Udhaystalin) July 7, 2021
அங்கு அவருடன் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடன் இருந்துள்ளார். இதுகுறித்து உதயநிதி அவரது ட்விட்டர் பக்கத்தில், " கழக தலைவர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றபின் முதன்முறையாக முத்தமிழறிஞரின் திருக்குவளை இல்லத்துக்கு சென்றபோது, அங்குள்ள பார்வையாளர் பதிவேட்டில், தான் வகிப்பது பதவி அல்ல பொறுப்பு என்று கலைஞர் வழியில் குறிப்பெழுதினார். கலைஞர்-கழக தலைவர் வழியில் நாமும் கடமையாற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார்.