மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி.!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பலியானார். இந்த விபத்தில் ராவத்தின் மனைவி உள்பட 13 பேர் பலியானார்கள். ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து நேற்று குன்னூர் விரைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு ராணுவ அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சாமிநாதன் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு, முதலமைச்சரின் தனி செயலாளர் உதயச்சந்திரன் ஆகியோர் சென்றிருந்தனர். ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் குன்னூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்கு இரவு ஓய்வெடுத்தார்.
இதனைத்தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) காலையில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.