திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இராஜை மக்களுக்கு விடியல்.. 5 மாதத்தில் இரயில்வே மேம்பால பணிகள் முடியும் - எம்.எல்.ஏ உறுதி..!
ராஜபாளையத்தில் 5 மாதத்தில் முழுவதுமாக மேம்பால பணியை முடித்து தீபாவளி பரிசாக மக்களுக்கு அளிப்பதாக எம்.எல்.ஏ தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் முன்னிலையில் எம்.எல்.ஏ தங்கபாண்டியன் மேம்பால பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்கள் மின்சார துறை மூலமாக மின்கம்பத்தை அகற்றி தருமாறும், நகராட்சி நிர்வாகத்திடம் கூறி மரங்களை அகற்றி தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.அதற்கு எம்.எல்.ஏ தங்கபாண்டியன் நாளை இருதுறை அதிகாரிகளிடம் கலந்துரையாடி பணி விரைவில் நிறைவடைய ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்துள்ளார். அத்துடன் "இன்னும் 5 மாதங்களில் மேம்பால பணி முழுவதுமாக நிறைவடைந்து, தீபாவளி பரிசாக மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும்" என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், கழகநிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.