மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை.! சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ சி.டி.ரவி
பாஜக தேசிய பொதுச்செயலாளரும் சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வுமான சி.டி.ரவி நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்து கோவில்களில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்க்கு பதிலளித்த சி.டி.ரவி, இந்துக்கள் இறைச்சி வெட்டி கொடுத்தால் முஸ்லிம்கள் வாங்குவது இல்லை. ஆனால் முஸ்லிம்கள் கடைகளில் இந்துக்கள் இறைச்சி வாங்குகின்றனர்.
உடுப்பி கங்கொல்லியில் இந்துக்களிடம் முஸ்லிம்கள் மீன் வாங்க கூடாது என்று கட்டுப்பாடு விதித்து உள்ளனர். இதனால் பல இந்து மீன் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அதேபோன்றுதான் இந்து கோவில்களில் முஸ்லிம்கள் கடை வைக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. இதை குற்றம்சாட்ட யாருக்கும் உரிமை இல்லை. இதை வைத்து அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
மகாத்மாக காந்தி கூறிய ‘‘ரகுபதி ராகவ ராஜா ராம், பதீத பாவன சீதாராம்’ என்ற பாடல்களில் அனைத்து மதங்களின் ஒற்றுமையையும் குறிப்பிட்டிருக்கும். இதை நாம் அனைவரும் பின்பற்றி வருகிறோம். ஆனால் இஸ்லாமியர்கள் இதை கடைபிடிப்பது இல்லை.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வசித்து வரும் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இரு மதத்தினரும் சரிசமமாக இருக்கும் இடங்களில் இந்து மக்கள் பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தார்.