மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சசிகலாவிற்கு தான் எப்போதும் எனது முழு ஆதரவு!. ஓப்பனாக பேசிய எம்எல்ஏ.!
திருச்சி மாவட்டம் தாராநல்லூர் அருகே கீரைக்கடை பஜாரில் முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
கருணாஸ் பேசுகையில், திருச்சி கீரைக்கடை பகுதியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர், சுதந்திர போராட்ட வீரர்கள் மருதுபாண்டியர்கள் உருவம் வரைந்த பெயர் பலகை சமூக விரோதிகளால் அவமதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் பாதுகாப்பில்லாத, அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
முக்குலத்தோர் புலிப்படையைக் கலைத்துவிட்டு பாஜகவில் இணையப் போகிறோம் என்கிற தகவல் தவறானது. நாங்கள் தனித்து செயல்படுவோம். சசிகலாவிற்கு எப்போதும் எங்கள் ஆதரவு உண்டு. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவது குறித்து மாநில நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவெடுப்போம். அடிமட்ட தொண்டனாக இருந்து உயர்ந்து தற்போது முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.