திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பரபரக்கும் தேவர் ஜெயந்தி.! பசும்பொன் நோக்கி வரும் பிரதமர் மோடி.! உற்சாகத்தில் பாஜகவினர்.!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 28, 29, 30-ந்தேதிகளில் தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறும். தேவர் ஜெயந்தி விழாவில் பால் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து வழிபடுவதையும், மொட்டையடித்து வழிபடுவதையும், பலர் கடைபிடித்து வருகின்றனர்.
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் சமுதாய மக்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துவார்கள். முதலமைச்சர் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று மரியாதை செலுத்துவார்கள் என்பதால் அரசு சார்பில் இப்போதிலிருந்தே பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜைக்கு தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு அழைப்பிவிடுக்கபட்டு இருந்தது.
இந்த அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 30ஆம் தேதி தமிழக வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறவுள்ள முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாக வெளியான தகவலால் பாஜகவினர் உற்சாகத்தில் உள்ளனர்.