மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த தாய்! அதனை நேரில் பார்த்த மகனுக்கு நேர்ந்த கொடூரம்!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியை சேர்ந்தவர் வசந்தா (49). இவரது கணவர் பிரிந்து சென்ற நிலையில் மகன் லால் கிருஷ்ணன்(13) மற்றும் மகள் ஒருவருடன் வசித்து வந்துள்ளார்.
லால் கிருஷ்ணன் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். அந்த சமயத்தில் சிறுவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தாய் வசந்தா களியக்காவிளை போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் சிறுவனின் மரணத்தை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், வசந்தாவின் கணவர் மோகன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் வசந்தாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், வசந்தாவும், அவரது கள்ளக்காதலன் சுபணன் என்பவரும் சேர்ந்து சிறுவன் லால் கிருஷ்ணனை கொலை செய்தது தெரிய வந்தது. விசாரணையில், சுபனனுடன் வசந்தா தனிமையில் இருந்ததை மகன் பார்த்துவிட்டதால், மகன் வெளியே கூறிவிடுவான் என நினைத்து, சுபனன் உதவியுடன் மகனை கொலை செய்துள்ளார். சிறுவன் கிருஷ்ணனின் கழுத்தை இறுக்கி சுபனன் கொலை செய்துள்ளார்.
உயிரிழந்த மகனின் வாயில் தூக்க மாத்திரைகளைப் போட்டு வசந்தா தண்ணீர் ஊற்றியுள்ளது 3 ஆண்டுகளுக்கு பின்பு தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.