மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மகன் இப்டி மாறிட்டானே.... பெற்ற மகனை கொலை செய்த தாய்.! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.!!
சேலம் மாவட்டம் அம்மா பாளையத்தைச் சேர்ந்தவர் உமாதேவி. கணவரை பிரிந்து வசிக்கும் இவர் தனது மகன் நவீன்குமாருடன் வசித்து வருகிறார். 19 வயது நவீன்குமார் சமீபத்தில் திருநங்கையாக மாறி, தனது பெயரை அக்க்ஷிதா என மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.
இந்தஇலையில், கடந்த வாரம் அம்மாபாளையம் காட்டுப்பகுதியில் நவீன்குமார் காயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்த ஊர் மக்கள் அவரை மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பெற்று வந்தநிலையில் நவீன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நவீன்குமாரின் தாய் உமாதேவியின் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. இதுதொடர்பாக போலீசார் உமாதேவியிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அதாவது தனது மகன் திருநங்கையாக மாறியது பிடிக்காமல் தாய் உமாதேவி அதே பகுதியைச் சேர்ந்த ஐந்து பேரின் உதவியுடன் நவீன்குமாரை அடித்து கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து உமாதேவி உள்ளிட்ட 6 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.