திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நிலவு மண் தமிழகத்தில் கிடைக்கும் அதிசயம்! இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி!!
நிலவை சோதனையிட அனுப்பப்பட உள்ளது சந்திரயான்-2 விண்கலம். இந்த விண்கலத்துடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பான ரோவர் என்ற வாகனமும் அனுப்பப்பட உள்ளது. இந்த வாகனத்தின் முக்கிய பணி நிலவில் உள்ள மண் வகைகளை ஆராய்வதுதான்.
அதற்கு முன்பாக இந்த வாகனத்தின் சோதனை முயற்சிக்காக நிலவில் காணப்படக்கூடிய அரிய வகை மண் அதிக அளவில் தேவைப்பட்டுள்ளது. இந்த மண் அமெரிக்காவிலிருந்து தான் பல்வேறு நாடுகள் பெற்று வருகின்றன. ஒரு கிலோ 150 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.
இதனால் இந்த மண் வகைகள் இந்தியாவில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பது பற்றி ஆராய முடிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து மும்பை ஐஐடி உடன் இனைந்து பேராசிரியர் அன்பழகன் துவங்கிய இந்த தீவிர ஆராய்ச்சி தற்போது வெற்றியை கொடுத்துள்ளது.
அதாவது நிலவின் மேற்பரப்பில் அதிக அளவில் காணக்கூடிய பசால்ட் என்ற எரிமலை பறை மற்றும் அனார்த்தசைட் என்ற பாறை வகைகளை சார்ந்த மண்கள் சேலத்தில் உள்ள சித்தாம்பூண்டி மற்றும் அதைச் சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.