தமிழக அரசின் அதிரடி செயல்! நேற்று ஒரே நாளில் 1000க்கும் மேற்ப்பட்டோர்க்கு கொரோனா பரிசோதனை..!



More than 1000 members coronoa tested in single day

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை தமிழகத்தில் மொத்தமாக 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் பலியாகியுள்ளனர். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதார துறையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அச்சத்திற்கு உண்டான மக்கள் பெரும்பாலானோர்  மருத்துவமனைக்கு சென்று இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய சென்றுள்ளனர். அதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழிகாட்டுதல்களை பின்பற்றி, காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Corona test

இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் இல்லாமலும் பாதிப்பு ஏற்ப்பட்டதை அடுத்து அனைவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. அதனை அடுத்து கொரோனா வைரஸ் அதிகம் பரவிய பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு சென்று ஊர் திரும்பி கடந்த 14 நாட்களில் வேறு ஊர்களுக்கு சென்ற மக்கள் அனைவருக்கும் அறிகுறி இல்லாவிட்டாலும் ரத்த பரிசோதனை செய்ய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வழிகாட்டு விதிமுறைகளை மாற்றியமைத்தது.

அதனை அடுத்து இரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் அளவையும் அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை சோதிக்கும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 19ஆக உயர்த்தியுள்ளனர். அதுமட்டுமின்றி கூடிய விரைவில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் சோதனை செய்யவுள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் மீது இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர்.