மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
7 வயது சிறுவனுக்கு வாயில் ஏற்பட்ட வீக்கம்! அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
சென்னையில் வசித்து வருபவர் பிரபுதாஸ். இவருக்கு 7 வயது மகன் உள்ளார். இந்த சிறுவனுக்கு அவனது 3 வயதிலிருந்து வாயின் வலது பக்கம் வீங்கியே இருந்துள்ளது. இந்நிலையில் சமீப காலமாக வீங்கியிருந்த பகுதிகளில் அந்தச் சிறுவனுக்கு கடுமையாக வலி ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பிரபுதாஸ் அந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து அங்கு மருத்துவர்கள் சிறுவனின் வாயில் ஸ்கேன் எடுத்து பார்த்துள்ளனர். அப்பொழுது சிறுவனின் வாயில் வீங்கிய பகுதியில் நூற்றுக்கணக்கான பற்கள் இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து பற்களை அகற்றவேண்டும் என கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுவனின் வாயில் இருந்த பற்கள் அகற்றபட்டது. மேலும் சிறுவனின் வாயில் இருந்து வித்தியாசமான அளவுகளில் 526 பற்கள் அகற்றப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.