தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், மகள் பலி.. போலீசார் விசாரணை.!



Mother and daughter death in water tank

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி மீனா. இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் வைஷாலி என்ற குழந்தை இருந்துள்ளது. இந்த நிலையில் கார்த்திகை தீபம் அன்று முனிராஜ் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார்.

Krishnagiri

அப்போது முனிராஜின் சகோதரி அண்ணன் வீட்டிற்கு துணி துவைப்பதற்காக வந்துள்ளார். அப்போது வீட்டில் தண்ணீர் நிரம்பி வழிந்தோடியதால் கேட்ப வாழ்வை அடைப்பதற்காக தீபா சென்றுள்ளார். அங்கு 7 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டிகள் மீனா மற்றும் குழந்தை வைஷாலி உயிரிழந்த கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Krishnagiri

இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த ஓசூர் டவுன் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.