திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கணவருடன் ஏற்பட்ட சண்டை.. தாய், மகன் கிணற்றில் விழுந்து தற்கொலை..!
சேலம் மாவட்ட பகுதியில் உள்ள ஓமலூரில் எம்.ஓலைப்பட்டியில் வசித்து வரும் கணபதி வயது 38. அமரகுந்தி பகுதியில் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி ஸ்ரீதேவி எனபவர் கடந்த சில நாட்களாக தாய் வீட்டில் இருந்துள்ளார். அப்போது கணவர் மகனுடன் மனைவியின் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை, கணபதி அருகில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார்.
கோவில் சென்று, வீடு திரும்பிய நிலையில் மனைவி மற்றும் மகனைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடியபோது, அப்பகுதியில் உள்ள கிணற்றில் சடலமாக மிதப்பதை கண்டனர்.
அவர்கள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து ஓமலூர் தீயணைப்பு துறையினர் அவர்களது உடல்களை மீட்டனர். இதுகுறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.