குக்கரில் சாராயம் காய்ச்சிய தாய்..! சரக்குக்காக காத்திருந்த 2 மகன்கள்..! குக்கரை போட்டுட்டு தெறிச்சு ஓடிய சம்பவம்.!



Mother helped to make kalla sarayam near ramanad

ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயே தனது இரண்டு மகன்களுக்கு வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா காரணமாக மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அனைத்து மது கடைகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் குடிக்கு அடிமையான சிலர் மது கிடைக்காமல் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் ஆங்காங்கே நடந்தவருகிறது. சிலர், அதிக விலை கொடுத்து ஏற்கனவே பதிக்கிவைக்கப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்து வருகின்றனர்.

இன்னும் சிலர், தங்கள் வீடுகளிலேயே கள்ள சாராயம் காய்ச்ச தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சேர்த்தவர் சந்திரசேகர். இவரது மனைவி விமலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களாக சந்திரசேகரின் குடும்பத்தினர் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அந்தப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து சந்திரசேகரின் வீட்டிற்கு வந்த போலீசார் அங்கு பதுக்கிவைக்கப்பட்டிருந்த 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை கைப்பற்றினர். மேலும், வீட்டின் கிச்சனில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டவாறு இருந்த குக்கர் மற்றும் சாராயம் காய்ச்ச பயன்படும் சில பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.

மேலும், தாய் விமலாவே தனது இரண்டு மகன்களும் கள்ளச்சாராயம் காய்ச்சி கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.