மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பெரும் சோகம்... மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் எடுத்த விபரீத முடிவு... நடந்தது என்ன.?
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன் - ரஞ்சிதா தம்பதியினர். இவர்கள் இருவருக்கும் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு திருமணம் ஆன நிலையில் மணிவண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். ரஞ்சிதா மாமியார் மற்றும் மாமனாருடன் வானவநல்லூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி குடும்ப பிரச்சினை காரணமாக ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகளின் பிரிவால் மிகுந்த மன வேதனையில் ரஞ்சிதாவின் மாமியார் மணிமேகலை இருந்த வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று மனைவியின் பிரிவை தாங்காமல் மணிவண்ணனும், மருமகளின் பிரிவை தாங்காமல் மணிமேகலையும் சாப்பிடாமல் படுத்து உறங்கியுள்ளனர். திடீரென அதிகாலை 2 மணியளவில் தூக்கத்திருந்து எழுந்த மணிவண்ணன் தனது தாயை காணாமல் பதறி துடித்துள்ளார். அக்கம் பக்கத்தில் என எல்லா இடத்திலும் தேடியை நிலையில் மணிமேகலை வீட்டின் பின்புறம் மயங்கி கிடந்துள்ளார்.
உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் மணிமேகலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் மணிமேகலை விஷம் குடித்து உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருமகள் இறந்த துக்கத்தில் மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.