மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாமியாருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த மருமகன்... வெந்நீரில் மிளகாய் பொடி தூவி மருமகன் மேல் ஊற்றிய மாமியார்!!
திருவெறும்பூர் அடுத்த பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் - டயானா மேரி தம்பதியினர். இவர்களுடன் டயானா மேரியின் தாயார் இன்னாசி அம்மாளும் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து பலமுறை மனைவி மற்றும் மாமியார் செல்வராஜை கண்டித்துள்ளனர்.
ஆனால் அதனை காதில் வாங்கி கொள்ளாமல் மீண்டும் மீண்டும் குடித்து விட்டு வந்து மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார் செல்வராஜ். ஒருகட்டத்தில் பொறுமை இழந்த இன்னாசியம்மாள் மற்றும் டயானா மேரி செல்வராஜ்க்கு தகுந்த பாடம் கற்பிக்க நினைத்துள்ளனர்.
அதன்படி கடந்த 5 ஆம் தேதி வழக்கம் போல் குடிபோதையில் வந்த செல்வராஜ் மாமியாரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு விட்டு படுத்து உறங்கியுள்ளார். கடும் கோபத்தில் இருந்த டயானா மற்றும் இன்னாசியம்மாள் வெந்நீரில் மிளகாய் பொடியை தூவி கொதிக்க கொதிக்க செல்வராஜ் மேல் ஊற்றியுள்ளனர். அதில் செல்வராஜ் அலறி துடிக்கவே அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து செல்வராஜை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையில் சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து டயானா மேரி மற்றும் இன்னாசியம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.