திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மாமியார் நாத்தனார் கொடுமை... திருமணமான ஒரு வருடத்தில் தற்கொலை ... அதிர்ச்சி சம்பவம்...!
நாமக்கல் பள்ளிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராகவேந்தர். இவர் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் ஈரோடு அக்ரகாரம் பகுதியில் வசிக்கும் இஞ்சினியரான அபிராமி (31), என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான சில நாட்களிலேயே ராகவேந்திரரின் தாய் மற்றும் சகோதரி இருவரும் அபிராமிக்கு, மன உளைச்சலை ஏற்படுத்தி வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் கடந்த மூன்று மாதமாக அவரது தந்தை வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வேலைக்கு சென்ற, அபிராமி உடல்நலம் சரியில்லை என்று சொல்லி வீட்டிற்கு செல்வதாக கூறி அவரது கணவர் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கணவர் வீட்டில், அபிராமி தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அபிராமியின் பெற்றோர் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். அதன் பின்னர் அபிராமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, அபிராமியின் தந்தை சகோதரி உட்பட உறவினர்கள் 50க்கும் அதிகமானோர். ஈரோடு செல்லும் ரோட்டில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளிபாளையம் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியல் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர் இதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில் அபிராமி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் தனது தற்கொலைக்கு கணவரின் தாய் மற்றும் சகோதரி தான் காரணம் என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அபிராமி பேசிய வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
ஒரு சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் கௌசல்யா விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில் தங்களிடம் தெரிவிக்காமல் உடற்கூறாய்வு செய்யக்கூடாது என உறவினர்கள் மருத்துவமனையில், ரகளையில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து பள்ளிபாளையம் போலீசார் அபிராமியின் கணவர் மாமியார் நாத்தனார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியார் நாத்தனார் கொடுமையில், பெண் தற்கொலை செய்து கொண்டது, அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.