மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தாய் தற்கொலை.! அதிர்ச்சி காரணம்.!
திண்டுக்கல் மாவட்டம் பழநி, பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்தவர் பர்கான். இவரது மனைவி சபீனா. இந்த தமபதிக்கு சனா, யமீனா என இரண்டு மகள்கள் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான பர்கான் சென்னையில் சுகாதாரத் துறையில் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில், சபீனா தனது பிள்ளைகளுடன் வசித்துவந்துள்ளார்.
இந்தநிலையில், நேற்று வெகு நேரமாகியும் சபீனா வீட்டில் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்தபோது சபீனா தூக்கிட்டு இருந்தார். குழந்தைகள் சனா, யமீனா இறந்த நிலையில் படுக்கையில் கிடந்தனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பழனி போலீசார், மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்த சபீனா எழுதியுள்ள கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில் என் சாவுக்கும் யாரும் காரணம் இல்லை. சில நாட்களாக நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். எனது இரண்டு குழந்தைகளும் நான் இறந்த பிறகு தனியாக இருப்பார்கள் ஆகவே அவர்களுக்கு விஷத்தை கொடுத்து கொன்று விட்டு நானும் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று எழுதியுள்ளார். கடிதத்தை கைப்பற்றிய போலீசார் இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.