மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது மகளை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற தாய்! வெளியான அதிரவைக்கும் பகீர் காரணம்!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரில் வசித்து வந்தவர் கோபால். இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு 13 வயது நிறைந்த மாரிச்செல்வி என்ற மகள் இருந்தாள். அவர் கோவில்பட்டி அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளி ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்.
அங்கு ஏழாம் வகுப்பு படித்து வந்த மாரிச்செல்வி கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதியில் இருந்து வீட்டிற்கு ஓடிவந்துவிட்டாள். அதனைத் தொடர்ந்து அவரது தாய் மாரிசெல்வியை பள்ளிக்குச் செல்லுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் மாரிச்செல்வி மறுத்து அடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த தாய் ராஜேஸ்வரி, மாரிசெல்வியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
இதில் மாரிச்செல்வியின் உடல் எரிந்து கருகியது. இதனைத் தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் மாரிச்செல்வி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் மகள் பள்ளிக்கு செல்லாததால் அவரை எரித்து கொலை செய்த தாய் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அதனை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வந்தநிலையில் ராஜேஸ்வரிக்கு ஆயுள் தண்டனையும, 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.