மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குன்றத்தூருக்கு அபிராமி, குமரிக்கு கார்த்திகா.. சேமியாவில் விஷம் கலந்து குழந்தை கொலை..! நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்.!!
காதலனை திருமணம் செய்வதற்காக, தனது குழந்தைகளுக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் அருகாமையில் குளக்கட்சி பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஷ் (வயது 34). இவரது மனைவி கார்த்திகா (வயது 21). ஜெகதீஷ் கொத்தனார் வேலை செய்து வருகிறார். தம்பதியருக்கு மூன்றரை வயது பெண் குழந்தையும், ஒன்றரை வயதில் சரண் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த சரண், திடீரென எலிக்கு வைத்த விஷப்பொடியை சாப்பிட்டு மயக்கம் அடைந்துள்ளதாக கார்த்திகா தனது கணவரிடம் கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ந்த ஜெகதீஷ் உடனடியாக வீட்டிற்கு வந்து குழந்தை சரணை, மார்த்தாண்டம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை முன்பே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், குழந்தையே தனது கையால் விஷப்பொடியை எடுத்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், குழந்தையின் தாய், தந்தையின் மொபைலில் உள்ள அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது கார்த்திகாவின் செல்போனில் வந்த அழைப்புகள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து சைபர் கிரைம் மூலமாக அது யார் என்பதை கண்டறிந்த காவல்துறையினர், மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தி வரும் சுனில் என்பவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது கார்த்திகாவுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பது தெரியாமல் சுனில் பழகியதாகவும், அது தெரிந்தவுடன் பேசுவதை நிறுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கார்த்திகாவின் வாக்குமூலத்தில், "தான் சுனில் மேல் வைத்த காதலால், தனது இரண்டு குழந்தைகளை கொன்றேன் என்றால் அவன் அதனை ஏற்றுக் கொள்வான் என்று நினைத்தேன். இதன் காரணமாக நான் சந்தேகம் வராமல் இருக்க சில நாட்களாக வீட்டில் எலி தொல்லை இருப்பதாக வீட்டை சுற்றி, கணவரிடம் கூறி விஷப்பொடியை தூவி வந்தேன். அதை ஊர் மக்கள் பார்க்கும்படியும் நடந்துகொண்டேன். பின் சம்பவத்தன்று குழந்தைகள் விரும்பி உண்ணும் சேமியா உப்புமாவில் விஷ பொடியை கலந்து கொடுத்தேன்." என கூறியுள்ளார்
இதனையடுத்து காவல்துறையினர் உடனடியாக மூத்த குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து பரிசோதனை செய்தனர். அப்போது மூத்த குழந்தை குறைவாக சேமியா உப்புமா சாப்பிட்டதால் தப்பித்துக் கொண்டார் எனவும், இரண்டாவது குழந்தை ஒன்றரை வயது ஆன நிலையில் அவரின் உடல் முழுவதும் விஷம் பரவி உடனடியாக அவர் இறந்துள்ளார் என தெரியவந்தது.
அத்துடன் மூத்த குழந்தையை திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கார்த்திகாவை விசாரணை செய்ததில், அவர் தாம் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதால் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.