மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திருப்பூர்: பிறந்து 15 நாளே ஆன குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்கவிட்டு சென்ற தாய்... போலீசார் விசாரணை!!
திருப்பூரில் பிறந்து 15 முதல் 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை பேருந்து நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற தாயின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தனக்கு பிறந்த 15 முதல் 20 நாட்களே ஆன ஆண் குழந்தையை அருகில் இருந்த பெண் பயணி ஒருவரிடம் பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரம் ஆகியும் அந்த பெண் குழந்தையை வாங்க வராததால் சந்தேகமடைந்த அந்த பெண் பயணி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இது குறித்து கூறியுள்ளார். அதனையடுத்து போலீசார் அந்த குழந்தையை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பட்டபகலில் குழந்தையை தவிக்கவிட்டு சென்ற தாயை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வீடியோவை வைத்து தேடி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.