வயதுக்கு வந்த உடனே பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்..!எம்.பி-யின் சர்ச்சை பேச்சால்.! கடுப்பாகும் பெண்கள்.!



MP talk about women marriage age

இந்தியாவில் பெண்களுக்கு திருமண வயது 18ல் இருந்து 21ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து நாடாளுமன்றத்தில் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரிலேயே பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 21-ஆக உயர்த்தும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது சட்டமாக நிறைவேற்றப்பட உள்ளது. 

இந்நிலையில், பெண் வயதுக்கு வந்த உடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எம்.பி. தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமாஜ்வாதி கட்சி எம்.பி. சயது துபெய்ல் ஹசன் பேசுகையில், வயதுக்கு வந்த உடன் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். வயதுக்கு வந்த பெண் 16 வயதில் திருமணம் செய்துகொண்டாலும் தவறில்லை.

பெண்கள் 18 வயதில் வாக்களிக்கும்போது ஏன் அதேவயதில் திருமணம் செய்துகொள்ளக்கூடாது? பெண் கருவுற்றல் வயதை அடைந்த உடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் நம்புகிறேன். அதேபோல், மற்றொரு சமாஜ்வாதி கட்சி எம்.பி.யான ஷபீக்கியூர் ரஹ்மான் கூறுகையில், இந்தியா ஒரு ஏழை நாடு. அனைவரும் தங்கள் மகள்களை குறைவான வயதிலேயே திருமணம் செய்துவைக்க நினைக்கின்றனர். மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மசோதாவை நான் நாடாளுமன்றத்தில் ஆதரிக்கமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

18 வயது அதற்கு முன் திருமணம் செய்து வைத்தால் பெண்களுக்கு ரத்தசோகை ஏற்படும். கர்ப்பத்தை ஏற்கும் அளவிற்கு உடல் தயாராக இருக்காது. பொதுவாக பட்டப்படிப்பு முடிக்கவே 20 வயதாகி விடும். அதன் பிறகுதான் அவர்களுக்கு சிந்தித்து முடிவெடுக்கும் மனநிலை உருவாகும். திருமணத்தின் போது பெண்ணுக்கு 18 வயது என்றால் அப்போது தான் பள்ளிப்படிப்பே முடித்திருப்பார்கள். அதற்குள் திருமணம் செய்து வைத்தால் விளையாட்டுத்தனமும் குழந்தைத்தன்மையும் மாறாது. எனவே பெண்ணின் திருமணத்திற்கான குறைந்தபட்ச வயதை உயர்த்த ஒப்புதலளித்தது வரவேற்கத்தக்கது என பலரும் கூறிவரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி எம்பிக்கள் கருத்துக்கு பல்வேறு தரப்பினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.