மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட வசந்த் & கோ கடைக்கு கொண்டு செல்லப்படும் எம்.பி வசந்தகுமார் உடல்!
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, 10 நாட்களுக்கு மேல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனை தொடர்ந்து சுயநினைவு இழந்த நிலையில், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார் மறைவிற்கு பிரதமர் மோடி. ராகுல் காந்தி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் உயிரிழப்பிற்கு பிறகு மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா நெகட்டிவ் என வந்துள்ளது. இதனையடுத்து வசந்த் குமார் உடலுக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை தி.நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட வசந்தகுமாரின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் அவர் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட வசந்த் & கோ கடைக்கு அவரது உடல் எடுத்துச் எடுத்துச் செல்லப்படவுள்ளது. இது அவரது குடும்பத்தினர் விருப்பம் என கூறுகின்றனர்.