காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
நெஞ்சுவலியால் சாலையில் சுருண்டு விழுந்த அரசு பணியாளர்.. சிகிச்சை பலனின்றி பரிதாப மரணம்.. கண்ணீருடன் உறவினர்கள்.!
ஆத்தூர் நகராட்சி உதவியாளராக பணிபுரியும் வெங்கடேசன் என்பவர் திடீரென நெஞ்சுவலி காரணமாக சாலையில் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன் (வயது 50). இவர் ஆத்தூர் நகராட்சியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரம் நகராட்சியில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 8 மாதங்களுக்கு முன்பே ஆத்தூர் நகராட்சிக்கு பணி இடமாற்றத்தால் வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது சொந்த ஊரிலிருந்து ஆத்தூருக்கு தினமும் பேருந்தில் சென்று வருவது வழக்கம். அதேபோல் இன்று சேலத்திலிருந்து ஆத்தூருக்கு சென்று, நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது திடீரென நெஞ்சுவலி காரணமாக சாலையில் சுருண்டு விழுந்துள்ளார்.
இதனைக் கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தநிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் உயிரிழந்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த, நகராட்சி அலுவலர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.
அத்துடன் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக் கூடத்திற்கு, உடற்கூறு ஆய்வுக்காக உடல் எடுத்துச் செல்லப்பட்டு பின், தனது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இவரது உயிரிழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.