#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செல்போனுக்காக நடந்தேறிய கொலை! கடலில் வீசப்பட்ட சடலம்!!
புது வண்ணாரப்பேட்டையில் உள்ள அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய். அதே பகுதியில் வசித்து வரும் சாமுவேலும் இவரும் நெருங்கிய நண்பர்கள்.
இந்த நிலையில், காசிமேடு கடற்கரையில் இருவரும் மது அருந்தி கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த வழியாக சென்ற நபரிடம் செல்போனை பறிக்க முயற்சி செய்தனர்.
இதனால் அந்த நபர் இருவரையும் தடுக்க முயற்சி செய்ததால், கீழே இருந்த கல்லை எடுத்து கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இதனால் காயமடைந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
பின்னர், சிறிதும் சலனம் இல்லமால் உயிரிழந்தவரின் சடலத்தை எடுத்து கடலில் வீசிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சஞ்சய் மற்றும் சாமுவேல் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.