மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சித்தப்பாவின் தலையை துண்டாக்கி காவல் நிலையம் எடுத்துச் சென்ற மகன்கள்! அதிர்ச்சி சம்பவம்!
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள புதுவயல் தைக்கால் பகுதியைச் சேர்ந்தவர் யூசுப் ரகுமான். இவர் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும், இவரது அண்ணன் சகுபர் அலிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் யூசப்பின் கடைக்குச் சென்ற சகுபர் அலி மகன்கள் நியாஸ் மற்றும் அவரது தம்பி ரகுமான் அவர்களது சித்தப்பாவை அரிவாளால் தாக்கியுள்ளனர். அப்போது அவர்களின் மோதல் அதிகரிக்க தொடங்கியது. ஒருகட்டத்தில் யூசுப்பை மடக்கி பிடித்து அவரின் தலையை துண்டாக்கியுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே யூசுப் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது சித்தப்பா என்று கூட பாராமல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் யூசுபின் தலையை துண்டித்து தலையுடன் சகுபர் அலி மகன்கள் நியாஸ் மற்றும் அவரது தம்பி ரகுமான் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.