மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உதயமாகிறது பெரியார் நாடு?.. இந்து, முஸ்லீம் & கிருத்துவ மதமே அழிக்கப்போகிறது? - பரபரப்பு பேட்டி..!
திருச்சி மாவட்டத்தில் உள்ள வயலூர் முருகன் கோவிலில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் 2 மாற்று சமுதாய நபர்கள் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டனர். இதனால் அங்கு சர்ச்சை வெடிக்க தொடங்கிய நிலையில், சிவாச்சாரியார் "இங்கு பல அநியாயம் நடக்கிறது. இந்த அரசு நன்றாக இருக்காது. நான் சாபம் விடுகிறேன். முருகா நீ பார்த்துக்கொள்" என பல தகவலை பேசி பரபரப்பு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில், அர்ச்சகருக்கு ஆதரவு தெரிவித்து ஏ.ஆர் பாஷா என்பவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "அர்ச்சகர்கள் அரசு நாசமாக போகவேண்டும் என்று வயிறெரிந்து சாபம் கொடுத்துள்ளார்கள். அர்ச்சகர்கள் கடவுளுக்காக தங்களை அர்ப்பணித்து சேவையாக பணியாற்றி வருகின்றனர். இதனை பரம்பரை பரம்பரையாக செய்து வருகிறார்கள். திமுக அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை அழித்துள்ளது. தீண்டாமை, ஜாதி ஒழிப்பு என பல அநியாயம் நடக்கிறது.
திமுக, திகவை பார்த்து நான் கேள்வி கேட்கிறேன். வட்டசெயலாளர் பதவி கொடுக்க வேண்டும் என்றால் கூட, அப்பகுதியில் ஜாதி ஓட்டை கணக்கெடுத்து பதவி கொடுப்பீர்கள். நீங்கள் தீண்டாமையை ஒழிக்கிறேன் என சாபம் வாங்குகிறீர்கள். கடந்த வருடத்தில் தலித் சமூக பெண் பஞ்சாயத்து தலைவரை கீழே அமர வைத்து பேசியிருந்தீர்கள். வி.சி.க தலைவர் திருமாவளவனை சோபாவில் அமர வைத்து கூட பேச மாட்டார்கள்.
இந்த வீடியோ கிருத்துவர் மற்றும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான். திமுகவின் நோக்கம் பெரும்பான்மை சமூகமான இந்துவை ஒழிப்பது. அது முடிந்ததும் முஸ்லீம் மற்றும் கிருத்துவர்களுக்கு பிரச்சனை ஏற்படும். பள்ளிவாசலில் வந்து நமது உரிமையில் தலையிடுவார்கள். இது திராவிட நாடு, பெரியார் நாடு என பெயர் மாற்றி, யாரும் கடவுளை கும்பிட கூடாது என செய்துவிடுவார்கள். நாம் சுதாரிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.