மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விழிப்புணர்வு ஊர்வலத்தில், மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு: விருதுநகரில் பரபரப்பு..!
விருதுநகரில், புத்தக கண்காட்சி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. விழிப்புணர்வு ஊர்வலத்தில் மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. எனவே, இதுகுறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வருவாய் வட்டாட்சியர் தலைமையில் ஊர்வலம் நடைபெற்றது. பதாகைகள் மற்றும் மேளதாளங்களுடன் ஊர்வலம் நடந்தது.
அந்த ஊர்வலம் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் சென்றபோது, மேளதாளம் வாசிக்க இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்தனர். அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தி, பிறகு மேளதாளம் இசைக்காமல் அமைதியாக ஊர்வலம் சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.