மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதல் கருத்து வேறுபாடால் பரிதாபம்.. உண்மையை மறைத்து, உடல் முழுவதும் விஷம் பரவி இளைஞர் பரிதாப மரணம்.!
காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால் காதலன் எலி மருந்து சாப்பிட்டு, உண்மையை மறைத்து இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அண்ணன் பெருமாள்கோவில் கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரின் மகன் வெங்கடேசன் (வயது 24). இவர் புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் தங்கியிருந்து, மளிகை கடையில் பணியாற்றி வந்துள்ளார்.
அப்போது, அங்குள்ள இருசாம்பாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ரீதியான பழக்கம் ஏற்படவே, பின்னாளில் அது காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து, வெங்கடேசனும் - இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதல் ஜோடிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்துபோன வெங்கடேசன், கடந்த 21 ஆம் தேதி எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். பின்னர், வயிறு வலி பொறுக்க முடியாமல் அவதிப்பட்ட நிலையில், தந்தைக்கு தொடர்பு கொண்டு வயிறு வலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பாலகிருஷ்ணன் மகன் வெங்கடேசனை சொந்த ஊருக்கு அழைத்து வந்து சிகிச்சை பார்த்த நிலையில், வெங்கடேசன் உண்மையை கூறாததால் வயிற்று வலிக்கான மருந்து கொடுத்ததும் பலனில்லை. இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அங்கு மருத்துவர்கள் வெங்கடேசனின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, எலி மருந்து சாப்பிட்டது உறுதியானது. இதன்பின்னர், மருத்துவர்கள் வெங்கடேசனுக்கு உரிய சிகிச்சை அளித்த நிலையில், எலி மருந்து உடல் முழுவதும் பரவி பரிதாபமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.