மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எங்க பெயர் எங்கே?.. வி.சி.க எம்.எல்.ஏ கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் தொண்டர்களுக்குள் கைகலப்பு.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேங்கைவயல் கிராமத்தில், பட்டியலினத்தவர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் சமூக விரோதிகள் மனிதக்கழிவை கலந்து அசுத்தம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
இந்த விஷயம் தொடர்பான தகவல்கள் வெளியாகவே, களத்தில் இறங்கிய வி.சி.க தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. நேற்று வி.சி.க துணை பொதுச்செயலாளர் எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் தலைமையில், நாகப்பட்டினத்தில் போராட்டம் நடைபெற்றது.
அந்த போராட்டத்தில் திடீரென விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்களுக்குள் இரண்டு பிரிவாக பிரிந்து சண்டையிட்டனர். காவல் துறையினர் முன்பே இருதரப்பு மோதிக்கொண்டதால், லேசான தடியடி நடத்தி அனைவரும் கலைக்கப்பட்டு அங்கிருந்து விரட்டப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் ஆர்ப்பாட்டத்தின் அழைப்பிதழில் தங்களது பெயர் இல்லை என்று மாவட்ட செயலாளரிடம் நடந்த வாக்குவாதம் இருதரப்பு மோதலானது தெரியவந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.