மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 53 வயது நபர் வீடுபுகுந்து பகீர் செயல்.!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம், முதலியார்தோப்பு கிராமத்தில் வசித்து வருபவர் ராமமூர்த்தி. இவரின் மனைவி செல்வராணி. இந்த தம்பதிகளுக்கு 10 வயதுடைய மகள் இருக்கிறார்.
இதே ஊரில் வசித்து வருபவர் அசோகன் (வயது 53). இவர் சிறுமியின் வீட்டில் ஆட்கள் இல்லாத நேரத்தில், குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். சிறுமியும் தண்ணீர் எடுத்து வர சென்ற நிலையில், அசோகன் வீட்டிற்குள் சென்றுள்ளார்.
அங்கு, சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றுள்ளார். சிறுமி அபயக்குரல் எழுப்பியதால், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என மிரட்டி தப்பி சென்றுள்ளார்.
தாயார் வீட்டிற்கு வந்ததும் சிறுமி நடந்ததை கூறி கதறி அழவே, பதறிப்போன செல்வராணி வேதாரண்யம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய அதிகாரிகள், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அசோகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.