மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#JustIN: வெல்டிங் வைத்து ஏ.டி.எம் பணம் கொள்ளை.. மிளகாய்பொடித்தூவி பகீர் செயல்..! நாமக்கல்லில் அதிர்ச்சி.!
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புதுச்சத்திரம் பகுதியில் வணிக வளாக கட்டிடத்தில் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தை வணிக வளாக தூய்மை பணியாளர் தினமும் காலை 05:30 மணியளவில் சுத்தம் செய்ய செல்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலை சென்றபோது ஏ.டி.எம் மையத்தின் வாயிலில் மிளகாய்பொடி தூவப்பட்டு இருந்துள்ளது. உள்ளே சென்று பார்க்கையில் ஏ.டி.எம்மில் கொள்ளை நடந்தது உறுதியானது. இதனையடுத்து, இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மோப்ப நாய் உதவியுடன் துப்பறியும் பணியில் ஈடுபட்டனர். மேலும், வெல்டிங் வைத்து கொள்ளை நடந்தது உறுதியானது. இதில், ரூ.4.5 இலட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொள்ளையர்களின் அடையாளம் சி.சி.டி.வி கேமிராவில் சேகரிக்கப்பட்டு வருகிறது.