மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நொறுங்கிய கார்; 2 மர வியாபாரிகள், வனவர் பரிதாப பலி.!
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மர வியாபாரியான மார்த்தாண்டம் ராஜன், கொல்லிமலை அரியூர் மர வியாபாரி செல்வகுமார், வனவர் ரகுநாதன் சனிக்கிழமை இரவு கொல்லிமலையில் இருந்து ராசிபுரம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
இவர்களின் வாகனம் பேளுக்குறிச்சி, மோளப்பாளையம் பகுதியில் சென்றபோது மோளப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டு இழந்து, நிழற்குடைத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜன் (வயது 43), செல்வகுமார் (வயது 42), வனவர் ரகுநாதன் (வயது 40) ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பேளுக்குறிச்சி காவல்துறையினர், உயிரிழந்தோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.