மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹோட்டல் உரிமையாளர்கள் அலெர்ட்.. இனி அதிரடி சோதனை தொடரும் - அமைச்சர் எச்சரிக்கை.!
நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில் ஷவர்மா உட்பட இறைச்சி உணவு சாப்பிட்ட 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி, மயக்கம் உட்பட பல்வேறு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதியாகி சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 12 வயதுடைய சிறுமி ஒருவர் சவர்மா சாப்பிட்டதாக கூறப்படும் நிலையில், அவர் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், உணவுகளின் தரம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினர் பெரும்பாலான இடங்களில் சோதனை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, தமிழகத்தில் உள்ள அனைத்து சாலையோரம் மற்றும் பிற உணவகங்களிலும் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கெட்டுப்போன உணவுகள் மற்றும் இறைச்சிகள் இருக்கும் பட்சத்தில், அந்த உணவகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.