மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாமக்கல் அருகே பயங்கரம்... மாயமான பெண் எலும்புக்கூடாக மீட்பு.. கண்ணீரில் பெற்றோர்கள்.!
ஒன்றரை வருடத்திற்கு முன்னர் மாயமானதாக கூறப்படும் பெண்மணி, விவசாய நிலத்தில் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை, அரியூர்நாடு ஊராட்சிக்குட்பட்ட பரவாத்தம்பட்டி பகுதியை சார்ந்தவர் பங்காரு. இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னக்கிளி. இந்த தம்பதிக்கு ரேணுகா என்ற 21 வயது மகள் இருக்கிறார்.
ரேணுகா கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து மாயமாகவே, பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இந்நிலையில், நேற்று காலை நேரத்தில் பங்காருவின் விவசாய நிலத்திற்கு அருகேயுள்ள புதரில் எலும்புக்கூடு இருந்துள்ளது.
அவ்வழியாக சென்றவர்கள் இதனை கவனித்த நிலையில், கொல்லிமலை வாழவந்திநாடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ரேணுகாவின் பெற்றோரும் அங்கு சென்றுள்ளனர்.
எலும்புகூடுக்கு அருகே இருந்த பாவாடை, சட்டை, தோடு போன்றவற்றை பார்த்து, அது தங்களின் மகள் என்பதை ரேணுகாவின் பெற்றோர்கள் உறுதி செய்து, மகளின் எலும்புக்கூடை பார்த்து கதறி அழுதுள்ளார்.
காவல் துறையினர் எலும்புக்கூடை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் ரேணுகா தற்கொலை செய்துகொண்டாரா? யாரேனும் கொலை செய்து உடலை புதரில் வீசினார்களா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்னர் மாயமான இளம்பெண் எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.