திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
காரை முந்தி சென்றதால் ஆத்திரம்; தனியார் பேருந்து ஓட்டுனரின் மீது தாக்குதல்; அலேக்காக தூக்கி உள்ளே வைத்த காவல்துறை.!
திருச்சி நகரில் இருந்து நாமக்கல் நோக்கி தனியார் பேருந்து பயணம் செய்தது. இந்த பேருந்து நேற்று இரவு நாமக்கல் நோக்கி பயணம் செய்கையில், அவ்வழியே சென்ற காரை பேருந்து முந்தி சென்றுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல், பேருந்தை இடைமறித்து தகராறு செய்தது. பயணிகள் அப்போது குழுவாக இருந்ததால் அனைவரும் கண்டனமிட, கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.
பின் மறுமார்கத்தில் பேருந்து திருச்சி நோக்கி பயணம் செய்தது. அப்போது, 10க்கும் மேற்பட்டோரை நிகழ்விடத்திற்கு வரவழைத்த அதே கும்பல், பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து ஓட்டுனரை தாக்கி இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பாக உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, ஓட்டுனரிடம் புகாரை பெற்ற அதிகாரிகள் 4 பேரை கைது செய்தனர்.