கார் ஒட்டி பழகியபோது சோகம்: விவசாயி காருடன் கிணற்றுக்குள் பாய்ந்து பரிதாப பலி.!



Namakkal Senthamangalam Farmer Died During Drive Session of Car

 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம், பெரியகுளம் திருமலைகிரி பகுதியில் வசித்து வருபவர் சண்முகம் (வயது 50). சொந்தமாக விவசாய தோட்டம் வைத்துள்ளார். 

இவரின் தோட்டத்தை அங்குள்ள வளப்பூர் நாடு பஞ்சாயத்து புளியம்பட்டி பகுதியைச் சார்ந்த விவசாயியான ராஜேந்திரன் (வயது 50) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இவரின் மனைவி கலைமணி. தம்பதிகளுக்கு கோபி என்ற 23 வயது மகனும், மாலினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில், ராஜேந்திரன் கார் ஓட்ட ஆசைப்பட்ட நிலையில், தனது மகன் கோபியிடம் கார் ஓட்டி பழகி வந்துள்ளார். 

நேற்று மாலை நேரத்தில் தனது உறவினரின் காரை கற்றுக் கொள்ள கோபி, ராஜேந்திரன் சென்றிருந்த நிலையில், காரை ஓட்டி பழகிவிட்டு மீண்டும் தோட்டத்தில் நிறுத்த முயற்சித்துள்ளார். 

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் எதிரில் இருந்த 50 ஆழமுள்ள விவசாய கிணற்றில் பாய்ந்து விபத்திற்குள்ளானது. கோபி கண்ணாடியை உடைத்து வெளியே தப்பிய நிலையில், ராஜேந்திரனுக்கு நீச்சல் தெரியாததால் காருடன் நீருக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சேந்தமங்கலம் காவல்துறையினர், 5 மணி நேரம் போராடி தீயணைப்பு படையினரின் உதவியுடன் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணையும் நடந்து வருகிறது.