நடு இரவில் நமீதாவிற்கு நேர்ந்த அவமானம்! விளக்கமளித்து கணவர் வெளியிட்ட அறிக்கை!!



nameetha car check by election squard

நாடு முழுவதும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுக்கும் வேலைகளில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை நமீதா அவரது கணவர் வீராவுடன் ஏற்காட்டிற்கு சென்றுள்ளார்.
அப்பொழுது அவர் சேலம் புலிகுத்தி தெருவில் சென்றுகொண்டிருக்கும்போது, பறக்கும் படை அதிகாரிகள் சிலர் நமீதாவின் காரை நிறுத்தி சோதனையில் ஈடுபட முற்பட்டனர்.

nameetha

இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால் அதனையும் மீறி பறக்கும் படையினர் நமீதாவின் வாகனத்தை சோதனை செய்தனர். ஆனால் அவர்களிடம் பணம், நகை எதுவும் இல்லாத நிலையில் அவர்கள் நமீதாவின் காரை செல்ல அனுமதித்துள்ளனர்.

 இந்நிலையில் இது குறித்து நமிதாவின் கணவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,  இரவு நாங்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற போது பல இடங்களில் எங்களது காரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாங்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தோம்.

nameetha

ஆனால் சேலம் ஆற்காடு சந்திப்பில் காரை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் எங்களிடம் மிகவும் அவமரியாதையாக நடந்து கொண்டனர். மேலும் எங்களை குற்றவாளிகளைப் போல நடத்தினர்.  நாங்கள் சில சட்டவிரோத பொருட்களை கடத்துவதாக கருதி காரில் சோதனை நடத்தினர். அனைவரின் பைகளையும் சோதனை செய்தனர் என கூறியுள்ளார்.