திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
'அந்த' உறவால் இளைஞர் வெட்டிக்கொலை... கள்ளக்காதலி கணவரின் மருமகன் கைது.!
நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்த இளைஞர் திருமணமான பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதட்டத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் அக்கலாம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சீனு(23). இவர் தனது படிப்பை முடித்துவிட்டு இந்திய ராணுவத்தின் விமானப்படை பிரிவில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்தார். இந்நிலையில் சீனுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரின் மனைவி மீனா என்பவருக்கும் தவறான உறவு இருந்திருக்கிறது. இது தொடர்பாக சீனு மற்றும் சத்யா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன் குமார்20) என்ற இளைஞர் தனது தாய் மாமா சத்யாவின் மனைவியுடன் தவறான உறவில் இருக்கும் சீனுவின் மீது கடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு ஏனோ தனது வீட்டிற்கு வெளியே படுத்திருந்தபோது அங்கு வந்த பிரவீன்குமார் தன் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனுவை சரா மாறியாக வெட்டி படுகொலை செய்தார்.
இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் சீனு. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பிரவீன் குமாரை கைது செய்தனர். கொலை செய்யப்பட்டு இருந்த சீனு இன்று கோவை இந்தியன் ஏர்போர்ஸ் பணிக்கு சேர வேண்டும் என பணி ஆணை பெற்றிருந்தார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.