அரசு மருத்துவமனையில் அலட்சியம்.. பரிதாபமாக பலியான சிறுவன்.. சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்..!



negligence-in-the-government-hospital-the-boy-who-died

மயிலாடுதுறையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் சிறுவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.

நடுக்கரையை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் ஹரிஷ். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். இதனைக்கண்ட பெற்றோர்கள் உடனடியாக ஹரிசை மீட்டு மயிலாடுதுறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

government hospital

இந்நிலையில் சிறுவன் ஹரிஷுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் சிறுவன் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்டார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு பாம்பு கடித்து இருப்பதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து ஹரிஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். மேலும் சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

government hospital

மேலும் இந்தச் சம்பவம் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஆட்சியர் லலிதா சிறுவனின் இறப்பு தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதாக தெரிவித்ததையடுத்து உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் மருத்துவமனையில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.