மருத்துவர்களின் அலட்சியம்.. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தை.. 1 மணி நேரத்தில் உயிரிழந்ததால் உறவினர்கள் மறியல்..!



Negligence of doctors.. Baby born in primary health center.. Relatives picket because he died in 1 hour..!

திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் புதிய காலனியில் வசித்து வருபவர்கள் முருகன் - பவானி தம்பதியினர். இவர்களுக்கு கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது கருவுற்றிருந்த தனது மனைவி பவானியை பிரசவத்திற்காக முருகன் தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்திற்காக ஞாயிற்றுக்கிழமை இரவு சேர்த்துள்ளார்.

இதனையடுத்து திங்கட்கிழமை காலை 8 மணிக்கு பவானிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும் குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்தில் குழந்தையின் நாடித்துடிப்பு குறைந்து குழந்தை உயிரிழந்ததாக உறவினர்களிடம் செவிலியர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பவானியின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Doctors negligence

மேலும் பவானியை ஞாயிற்றுக்கிழமை இரவு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கும் போது மருத்துவர்கள் யாரும் பணியில் இல்லை என்றும் இதனைப் பற்றி செவிலியர்களிடம் விசாரித்ததற்கு இரவு பணியில் மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள் என்றும் தாங்கள்தான் மருத்துவம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பவானிக்கு செவிலியர்கள் பிரசவம் பார்த்து சுகப்பிரசவமான நிலையிலும் மருத்துவர்கள் இல்லாததால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என்று கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தகவல் அறிந்து வந்த செய்யாறு சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் சதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் போலீசார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கூறியதால் பவானியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.