ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
வீடு திருஷ்டி கழிக்கவும் இனி நம்ம ஜி.பி முத்துதான் உதவி.. வீட்டின் உரிமையாளர் அடித்த போஸ்டரால் ஆரவாரத்தில் ஜி.பி-யன்ஸ்..!
புதிய வீடுகட்டிக் கொண்டிருக்கும் ஒருவர், திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவின் புகைப்படத்தை பேனர் அடித்து வீட்டிற்கு முன் வைத்துள்ளார்.
பொதுவாக புதிய வீடு கட்டும் போது கண் திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதற்காக பூசணிக்காய் பொம்மை கட்டுவது அல்லது திருஷ்டி பொம்மை கட்டுவது வழக்கமான ஒன்றாகும். இதன்மூலம் கண் திருஷ்டி ஏற்பட்டாலும் அது பாதிக்காது என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மேலும், கண் திருஷ்டி படக்கூடாது என்பதற்காக வீட்டின் முன் தும்பை மற்றும் துளசி, அருகம்புல் போன்ற செடிகளையும் சிலர் வளர்ப்பர். ஆனால், நெல்லை மாவட்டத்திலுள்ள பனங்குடி அருகாமையில் கலந்தபனை என்ற கிராமத்தில் வசித்து வரும் கண்ணன் என்பவர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் தற்போது தனக்கு சொந்தமான ஒரு இடத்தில் புதிய வீடு கட்டி வருகிறார்.
புதிய வீடு கட்டுவதால் அவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கண் திருஷ்டி பட்டு விடும் என்ற காரணத்தால் ட்ரெண்டிங்காக யோசித்த கண்ணன் மற்றவர்களை விட வித்தியாசமாக டிக்டாக் பிரபலமான ஜி.பி.முத்துவின் புகைப்படத்துடன் "மூஞ்சியும் மொகரையும் பாரு" என்ற வாசகத்துடன் டிஜிட்டல் பேனர் அடித்து வீட்டிற்கு முன் வைத்துள்ளார்.
இதனை கண்டு அப்பகுதி மக்கள் முதல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பொதுமக்கள் வரை அனைவரும் பார்த்து சிரித்துக் கொண்டே செல்கின்றனர்.மேலும், தற்போது இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.