திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசிய நெல்லை கண்ணன் கைது!
இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் எதிராகப் பேசிய விவகாரம் தொடர்பாக, பெரம்பலூர் அருகே தங்கியிருந்த பேச்சாளர் நெல்லை கண்ணன் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் மாநாடு நடந்தது. அதில் பங்கேற்று பேசிய நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாக பா.ஜ.க.வினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதற்குப் பிறகு, நெல்லை கண்ணன் வீட்டை விட்டு வெளியே செல்ல காவல்துறை அனுமதி மறுத்து வந்த நிலையில், திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த நிலையில், நெல்லை கண்ணனைக் கைதுசெய்யக் கோரி பா.ஜ.கவின் தேசியச் செயலர் H.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வானதி ஸ்ரீநிவாசன் உள்ளிட்டவர்கள் சென்னையில் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
இந்த நிலையில், பெரம்பலூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனைக் அம்மாவட்ட காவல்துறையினர், அங்கேயிருந்து நெல்லை கண்ணனை காரில் அழைத்துச் சென்றனர். பின்னர் நெல்லை கண்ணனைக் கைதுசெய்வதற்காக திருநெல்வேலியிலிருந்து வந்திருந்த காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.