அத்திவரதர் தரிசனம்.! சற்றுமுன் வெளியான அறிவிப்பால் அதிர்ச்சியில் பக்தர்கள்!!



new announcement about athivaradhar dharisanam

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும். மொத்தம் 48 நாட்கள் நடக்கும் இந்த வைபவத்தில் 24 நாட்களுக்கு சயன கோலத்திலும் மீதமுள்ள 24 நாட்களுக்கு நின்ற கோலத்திலும் அத்திவரதர் காட்சியளிப்பார். 

அந்தவகையில் சயன கோலம் முடிந்து,  நின்ற கோலம் கடந்த 1-ஆம் தேதி துவங்கியது. அதனை தொடர்ந்து  ஆகஸ்டு 16 வரை மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம். பின்னர் 17 ம் தேதி ஆக்கிரம விதிகளின்படி அனைத்து பூஜைகளும் செய்யப்பட்டு, 18 ம் தேதி குளத்தில் வைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

athivarathar

அதனை தொடர்ந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய திரண்ட வண்ணம் இருந்தனர். அத்திவரதர் தரிசனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்து வந்து தரிசித்தனர். 

இந்நிலையில் நாளை மூலவர் வரதராஜ பெருமாளின் கருடசேவை நடைபெற இருப்பதால்,மாலை 5 மணியோடு அத்திவரதர் தரிசனம் நிறைவுபெறும் எனவும், இறுதி நாளான ஆகஸ்டு 16 அன்று காலை 5 மணிக்கே அத்திவரதர் தரிசனம் தொடங்கும் பின்னர்  பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்துமுடித்த பிறகு நடை சாத்தப்படும் எனவும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பக்தர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.