பிறந்த உடன் தொப்புள் கொடியுடன் கிணற்றில் சடலமாக மிதந்த பச்சிளம் குழந்தை! அந்த பெண்தான் காரணமா?



New born baby dead body found in well near Nellai

குழந்தை பிறந்து தொப்புள்கொடி கூட அறுக்கத்தநிலையில் கிணற்றில் இறந்து மிதந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல் நிலையம் அருகே கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றுக்குள் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று தொப்புள்கொடி கூட அறுக்காதநிலையில் இறந்து மிதந்துள்ளது. கிணற்றுக்குள் குழந்தை இறந்தது கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீயணைப்புத்துறை வீரர்களின் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்துகிடந்த குழந்தையை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளார் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே அதே பகுதியை சேந்த விவாகரத்து பெற்ற பெண் ஒருவரின் மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்திவருகின்றனர். குழந்தை பிறந்து தொப்புள்கொடி கூட அறுக்காதநிலையில் குழந்தையை யாரோ கிணற்றில் வீசிச்சென்ற சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.