திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதரில் இருந்து கேட்ட அழுகை சத்தம்..! இரத்தமும் சதையுமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை..! அதிர்ச்சி சம்பவம்.!
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை ஓன்று சாலை ஓரத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடை சேர்ந்த பிரசாந்த் என்ற இளைஞர் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் உள்ள நாகரப்பாளையம் சாலை வழியே சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதியில் உள்ள விடுதியின் சாலை முன்பு குழந்தை அழும் சத்தம் கேட்டு, சத்தம் வரும் பகுதியை நோக்கி சென்றுள்ளார்.
அங்கு பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று புதரின் அருகில் வீசப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க, சம்பவம் இடத்திற்கு வந்த மருத்துவ ஊழியர்கள் குழந்தையை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை நலமுடன் இருப்பதாக கூறியதை அடுத்து, அதே மருத்துவமனையில் இயங்கிவரும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் குழந்தையை ஒப்படைத்தனர். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் குழந்தையை வீசி சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.