எப்படி தான் மனசு வருதுதோ... கழிவு நீர் தொட்டியில் கிடந்த பெண் சிசு... போலீசார் விசாரணை!!



New born girl baby threw in water tank

மதுரையில் பெண் பச்சிளம் சிசுவை கழிவு நீர் தொட்டியில் வீசி சென்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. என்ன தான் பெண் சுதந்திரம், பெண் விடுதலை என்று பேசினாலும் ஒரு புறத்தில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதும், பெண் சிசுவை கருக்கலைப்பு செய்வதும் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கழிவு நீர் தொட்டியில் பெண் சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடனே அந்த குழந்தையை மீட்டு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அந்த குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

New born girl baby

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சியை வைத்து குழந்தையை யார் கொன்று இங்கு வீசி சென்றுள்ளனர் என்று ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிகழ்வு அரிந்த மக்கள் எப்படி தான் பச்சிளம் குழந்தையை கொன்று வீச மனசு வந்ததோ என வருத்தப்பட்டு வருகின்றனர்.