மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய நடவடிக்கை.! சென்னை மாநகராட்சி அசத்தல்.!!
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் ரூ.335 கோடியில் 3 புதிய மேம்பாலங்களை கட்ட சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்கள், மின்சார ரயில்கள் என்று பொது போக்குவரத்துகள் இயக்கப்பட்டாலும் மக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக 5,6 பேர் பயணிக்கும் கார்களில் ஒருவர் மட்டுமே பயணிக்கின்றனர்.
இதன்காரணமாக தான் சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகின்றது. சென்னையில் தினமும் 10 லட்சம் கார்கள், 40 லட்சம் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகிறது என கூறப்படுகிறது. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதாவது ரூ.335 கோடி செலவில் 3 இடங்களில் மேம்பாலங்களை கட்ட முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாசர்பாடி கணேசபுரம், ஓட்டேரி, தி.நகர் உஸ்மான் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலம் கட்ட முடிவு செய்துள்ளனர்.