மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விரைவில் உருவாகிறது புதிய புயல்..! சென்னை வானிலை ஆய்வு மையம் புது தகவல்..!
அந்தமான் வங்கக்கடல் பகுதிகளில் வரும் 16 ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின்படி, தெற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் குறைத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது எனவும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும், 16 ஆம் தேதி புயலாக மாறி மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனால் மணிக்கு 75 கிலோ மீட்டர் வரை காற்று வீச வாய்ப்பிருப்பதாகவும், இதனால் வங்கக்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க செல்பவர்கள் முகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் எனவும், அதேநேரம், மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.