திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு புதிய பேருந்து.! குஷியில் பொதுமக்கள்.!
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு புதிய அரசு பேருந்து துவக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல மாவட்டங்களில் புதிய பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தவகையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கறம்பக்குடியிலிருந்து, கந்தர்வகோட்டை வழியாக சென்னைக்கு அரசு பேருந்து இயக்க முடிவு செய்தனர்.
இதனையடுத்து கறம்பக்குடியிலிருந்து சென்னைக்கு புறப்படும் அரசு பேருந்து தொடக்க விழா கறம்பக்குடி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் கொடியசைத்து பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.
அந்த விழாவில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் தெற்குத்தெரு சரவணகுமார், நகர செயலாளர் அப்துல்லா, மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், விஜயாபூபதி உள்பட பல அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கறம்பக்குடியில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.